Home / ஏனையவை / காலையில்வெறும் வயிற்றில் இதை குடியுங்கள்! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்

காலையில்வெறும் வயிற்றில் இதை குடியுங்கள்! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் முறையானது ஜப்பான் மக்களிடம் இருந்து நடைமுறைக்கு வந்தது. தினமும் காலையில் முகத்தை கழுவியதும் பற்களை துலக்காமல், வெறும் வயிற்றில் 4 டம்ளர் தண்ணீரை குடித்துவிட்டு 1 மணி நேரம் எதுவுமே சாப்பிடக் கூடாது.

இந்த முறைக்கு பெயர் தண்ணீர் தெரபி என்று கூறுகிறார்கள். இதை தினமும் செய்வதால் தான் ஜப்பானிய மக்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் சிறிது நேரத்திலேயே சீரான முறையில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.

தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

அதிகாலையில் தினமும் 1 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு பின் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை மூலம் ஏற்படும் தீவிரத்தை வராமல் தடுக்கலாம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *